ADDED : நவ 23, 2025 01:23 AM
ஈரோடு, ஈரோடு அருகேயுள்ள திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லுாரியின் (வி.சி.இ.டி.,) வெள்ளி விழாவை முன்னிட்டு விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் ஜெயராமன் வரவேற்றார். வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர் பாலசுப்ரமணியம், யுவராஜா சிறப்புரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்களாக ரகு பரமசிவம் (இந்தியா கேம்பஸ் ஆட்சேர்ப்பு முன்னணி, ஹெக்ஸ்நோட்), பிரசாத் (இயக்குநர் & தலைவர், ஹெச்சிஎல் டெக்), ராகுல் (இணை இயக்குநர், மைண்ட்ஸ் பிரிண்ட்) கலந்து கொண்டனர். தொழில் துறையின் தற்போதைய போக்கு, பணியமர்த்தல் எதிர்பார்ப்பு மற்றும் எதிர்கால திறன்க குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். டிஜிட்டல் திறன், தொடர்பு திறன் மற்றும் புதுமையான சிந்தனையே, மாணவர்களின் வேலை வாய்ப்பு வளர்ச்சிக்கு இன்றியமையாதவை என வலியுறுத்தினர். நிகழ்வில் புல முதல்வர், தேர்வுகட்டுப்பட்டு அதிகாரி, நிர்வாக மேலாளர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

