ADDED : டிச 21, 2025 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் நகராட்சி நிர்வாகம் சார்பில், பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம், நகராட்சி அலுவலகத்தில் இருந்து நேற்று தொடங்கியது.
தலைவர் சூர்யபிரகாஷ் தொடங்கி வைத்தார். சென்னிமலை ரோடு, பஸ் ஸ்டாண்ட், மெயின்ரோடு வழியாக சென்று தினசரி மார்க்கெட் வழியாக நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. தனியார் கல்லுாரி மாணவிகள், விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நகராட்சி கமிஷ்னர் பால்ராஜ், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் பழனிச்சாமி, பொறியாளர் குணசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

