ADDED : ஜூலை 04, 2026 04:17 AM
அ நிறம் | அளவு
பெருந்துறை:ஈரோடு,
சூரம்பட்டி, ஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன், 78; பெருந்துறை
பெரியவேட்டுவபாளையம் பிரிவு அருகே இவருக்கு சொந்தமான ஒரு கடையை
வாடகைக்கு விட்டுள்ளார்.
அதன் அருகில் ஒரு சிறிய அறை உள்ளது. அவ்வப்போது வந்து சில நாட்கள் தங்கி செல்வார்.
கடந்த,
30ம் தேதி வந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை அறையில் இருந்து
துர்நாற்றம் வீசியுள்ளது. தகவலின்படி சென்ற பெருந்துறை போலீசார்
சென்று பார்த்தபோது, நடராஜன் உயிரிழந்து கிடந்தார். சாவுக்கான காரணம்
குறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
