ADDED : ஜூலை 04, 2026 04:18 AM
ஈரோடு:தமிழகத்தில்,
பதிவு சார் நிலை பணியின் கீழ், 132 சார்பதிவாளர்கள் பணியிட மாற்றம்
செய்யப்பட்டுள்ளனர். இதில் ஈரோடு மாவட்டத்தில், 13 பேர்
மாற்றப்பட்டுள்ளனர். விபரம் வருமாறு: ஈரோடு சார் பதிவாளர் (சீட்டு
மற்றும் சங்கம்) விமலாதேவி - அம்மாபேட்டை சார்பதிவாளர்; ஈரோடு சார்பதிவகம்
2ம் எண் இணை சார் பதிவாளர் பாஸ்கரன் - திண்டுக்கல் மாவட்டம்
வத்தலகுண்டு சார்பதிவகம்; டி.என்.பாளையம் சார்பதிவாளர் சங்கீதா -
திருப்பூர் சார்பதிவகம் எண்-2 இணை சார்பதிவாளர்.
அந்தியூர்
சார்பதிவாளர் ஜெகதீசன் - கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் சார்
பதிவகம்; கோபி சார் பதிவகம் எண்-2 இணை சார்பதிவாளர் ராமதிலகம் -
திருப்பூர் மாவட்டம் குன்னத்துார் சார் பதிவகம்; கோபி சார் பதிவாளர்
(நிர்வாகம்) மஞ்சுளா - தஞ்சை வல்லம் சார்பதிவகத்துக்கு
மாற்றப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் சார்
பதிவாளர் பிரீத்தி - ஈரோடு சூரம்பட்டி சார்பதிவகம்; திருப்பூர்
மாவட்டம் கணியூர் சார்பதிவாளர் கண்ணன் - டி.என்.பாளையம் சார்பதிவகம்;
திருப்பூர் சார் பதிவகம் எண் - 2 இணை சார்பதிவாளர் நிசார் அகமது -
கோபி சார் பதிவகம் எண்-2 இணை சார் பதிவாளர்; திண்டுக்கல் மாவட்டம் பழனி
சத்ரபட்டி சார்பதிவாளர் கமலக்கண்ணன் - கொடுமுடி சார்பதிவகம்;
சேலம் கிழக்கு சார்
பதிவாளர் (நிர்வாகம்) புவனேஸ்வரி - கோபி சார்
பதிவகம் எண் - 1 இணை சார்பதிவாளர்; சேலம் துணை பதிவுத்துறை
சார்பதிவாளர் (நிர்வாகம்) கலாவதி - ஈரோடு சார்பதிவாளர் (சீட்டு
மற்றும் சங்கம்); திருப்பூர் மாவட்டம் கோமங்கலம் சார்பதிவாளர்
சிவகுமார் - நம்பியூர் சார்பதிவகத்துக்கும்
மாற்றப்பட்டுள்ளனர்.
