/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புன்செய்புளியம்பட்டி சந்தையில்ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை
/
புன்செய்புளியம்பட்டி சந்தையில்ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை
புன்செய்புளியம்பட்டி சந்தையில்ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை
புன்செய்புளியம்பட்டி சந்தையில்ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை
ADDED : மார் 21, 2025 01:19 AM
புன்செய்புளியம்பட்டி சந்தையில்ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை
புன்செய்புளியம்பட்டி:ஈரோடு மாவட்டம் புன்செய் புளியம்பட்டியில் கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை நடக்கிறது.
சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. நேற்று கூடிய சந்தைக்கு, 30 எருமை, 250 கலப்பின மாடு, 200 ஜெர்சி மாடு, 80 வளர்ப்பு கன்றுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். எருமைகள், 20 ஆயிரம் ரூபாய் முதல் 42 ஆயிரம் ரூபாய்; கறுப்பு வெள்ளை மாடு, 22-48 ஆயிரம் ரூபாய்; ஜெர்சி மாடு, 23-53 ஆயிரம் ரூபாய், சிந்து, 15-40 ஆயிரம் ரூபாய், நாட்டுமாடு, 45-76 ஆயிரம் ரூபாய்; வளர்ப்பு கன்றுகள், 7,000 முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
கடந்த வாரத்தை விட மாடுகளின் வரத்து அதிகரித்தது. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
650 மாடுகள் வரத்துஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு நேற்று ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, திண்டுக்கல், திருப்பூர், தேனி போன்ற பகுதிகளில் இருந்து மாடுகள் விற்பனைக்கு அழைத்து வரப்பட்டன.
தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் வந்திருந்தனர். சந்தைக்கு, 7,000 முதல், 23,000 ரூபாய் வரையிலான விலையில், 60 கன்றுகள்; 22,000 முதல், 65,000 ரூபாய் மதிப்பில், 200 எருமை மாடுகள்; 22,000 முதல், 75,000 ரூபாய் மதிப்பில், 300 பசு மாடுகள், 70,000 ரூபாய்க்கு மேலான விலையில், 80க்கும் மேற்பட்ட கலப்பின மாடுகளும் கொண்டு
வரப்பட்டன.கடும் கோடை, மழை இன்மையால் பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உலர் தீவனத்தின் விலையும் கடுமையாக உயர்வதால் மாடுகளை அதிகமாக விற்பனைக்கு அழைத்து வந்தனர். 90 சதவீத மாடுகள்
விற்பனையாகின.

