/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறை காருண்யா மெட்ரிக் பொது தேர்வுகளில் 100 சத தேர்ச்சி
/
பெருந்துறை காருண்யா மெட்ரிக் பொது தேர்வுகளில் 100 சத தேர்ச்சி
பெருந்துறை காருண்யா மெட்ரிக் பொது தேர்வுகளில் 100 சத தேர்ச்சி
பெருந்துறை காருண்யா மெட்ரிக் பொது தேர்வுகளில் 100 சத தேர்ச்சி
ADDED : மே 17, 2024 02:12 AM
பெருந்துறை: பெருந்துறையை அடுத்த சிலேட்டர்புரம் காருண்யா வித்யா பவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், 10, 11 மற்றும் 12 பொதுத்தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.
பத்தாம் வகுப்பில் தேர்வெழுதிய, 74 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்தனர். மாணவன் லித்திஷ், 494 மதிப்பெண் எடுத்து முதலிடம்; 486 மதிப்பெண்கள் பெற்று கபிலன், ராஜலிங்கம் இரண்டாமிடம்; 485 பெற்று தர்ஷனா, திவ்ய நிலா மூன்றாமிடம் பெற்றனர். 450க்கு மேல், 14 பேர், 400க்கு மேல் 33 பேரும் மதிப்பெண் எடுத்தனர்.
இதேபோல் பிளஸ் ௨ தேர்வெழுதிய, 57 பேரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். மாணவி சுபரஞ்சனி, 582 மதிப்பெண்கள் பெற்று முதலிடம், 581 எடுத்து நிவேந்தரா இரண்டாமிடம், 558 எடுத்து பிரதீப் ஹரி மூன்றாமிடம் பெற்றனர். கணிதத்தில் ஒருவர், கணினி அறிவியலில் இருவர், வணிகவியல், கணக்குப்பதிவியல், பொருளியலில் தலா ஒருவரும் நுாறு மதிப்பெண் எடுத்தனர். பிளஸ் ௧ தேர்வில் மாணவி மெய்விழி, 571 மதிப்பெண்; கோகுலவாணன், 569; லாவண்யா, 567 மதிப்பெண் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர். தேர்வில் சாதித்த மாணவ-மாணவியர், இருபால் ஆசிரியர்களை, பள்ளி தாளாளர் பொன்னு
சுவாமி பாராட்டி பரிசளித்தார்.

