/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்கள்
/
ஈரோடு மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்கள்
ஈரோடு மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்கள்
ஈரோடு மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற 11 ஆசிரியர்கள்
ADDED : செப் 05, 2024 03:22 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், சிறந்த பணிக்காக மாநில அரசின் நல்லா-சிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள், சக ஆசிரிர்களிடம் வாழ்த்து பெற்றனர். நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் பேட்டி விபரம்:
ஈரோடு, குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.கோபால்: கடந்த, 29 ஆண்டுகளாக ஆசிரியராக பணி-யாற்றுகிறேன். 100 சதவீத தேர்ச்சியை பல ஆண்டுகள் பெற்று கொடுத்துள்ளேன். பள்ளிக்கு கட்டடம் கட்ட, தனியாரிடம் இருந்து நிலம் வாங்கி கொடுத்துள்ளேன். இது போன்று பல்-வேறு பணிகளை பள்ளி, மாணவ,மாணவிகள் வளர்ச்சிக்கு செய்-துள்ளேன்.மொடக்குறிச்சி, கிளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் (கணிதம்) வி.உமா மகேஸ்வரி: 14 ஆண்டுக-ளாக ஆசிரியராக பணியாற்றுகிறேன். தற்செயல் விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பும் எடுத்ததில்லை. கல்வி வளர்ச்சிக்காக நிதி பெற்று கொடுத்துள்ளேன். மேலும் மாணவ,மாணவிகளின் கல்வி மேம்பாடு, பள்ளி வளர்ச்சிக்கு நிதி பெற்று கொடுத்துள்ளேன்.
செங்குந்தபுரம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சு.ஸ்ரீதேவி: 20 ஆண்டாக ஆசிரியராக உள்ளேன். கற்றல், கற்பித்தல் மட்டுமின்றி சமுதாய பணியும் செய்கிறேன். கடந்தாண்டு கனவு ஆசிரியர் விருது பெற்றேன். இதுவரை ஏழு முறை பல்வேறு விருதுகளை பெற்றுள்ளேன். கொரோனா காலத்தில், 50 மாணவர்களுக்கு இலவசமாக ஸ்போக்கன் இங்-கிலீஷ் வகுப்பை ஆன்லைன் மூலம் எடுத்துள்ளேன்.
அந்தியூர், கிழக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பி.ஜெயராஜ்: கடந்த, 28 ஆண்டுகளாக ஆசிரியராக உள்ளேன். முதன் முறையாக நல்லாசிரியர் விருது பெற்-றுள்ளேன். மலைவாழ் மக்கள் கல்வி பயில வழி வகை செய்-துள்ளேன். அவர்கள் சமூக பிரச்னையை தீர்க்கவும், அங்குள்ள சுற்றுச்சூழல் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்-டுள்ளேன்.
அந்தியூர், ஆலாம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.ஜெயக்குமார்: கடந்த, 24 ஆண்டுகளாக ஆசிரிய-ராக உள்ளேன். பொது தேர்வுகளில் மாணவ, மாணவிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி பராமரிப்பு சிறந்த முறையில் உள்ளது. பள்ளிக்கு கட்டடம் மற்றும் அடிப்படை வச-திக்காக நிதி பெற்று கொடுத்துள்ளேன்.
நம்பியூர், சாவக்கட்டுப்பாளையம் அரசு பள்ளி தமிழ் ஆசிரியர் கந்த
சாமி: கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை பெற்றதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் வளர்ச்சித்துறை செந்தமிழ் சொற்ப பரப்பியல் அகரமுதலி திட்ட இயக்கத்தின் மூலம், 2020ம் ஆண்டு துாய தமிழ் பற்றாளர் விருது எனக்கு வழங்கப்பட்டது.
தலமலை அரசு உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வேம்படி துரை: நான் திருச்சி, சேலம் பகுதிகளில் உண்டு உறைவிட பள்ளிகளில் பணியாற்றிய போது, பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற காரணமாக இருந்தேன். தலமலையில் கடந்த ஓராண்டாக பணியாற்றி வருகிறேன். எனக்கு டாக்டர் ராதா-கிருஷ்ணன் விருது கிடைத்தது மகிழ்ச்சியாகவும், ஊக்கமளிக்கும் வகையிலும் உள்ளது.
குருவரெட்டியூர், மேல்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் எஸ்.பூபதிராஜா: கிராமப்புறத்தில் பணிபுரியும் என்னை போல் ஆசிரியருக்கு, நல்லாசிரியர் விருது கிடைத்தை பெருமையாக நினைக்கிறேன். பின்தங்கிய நிலையில் இருந்து, முதல் தலைமு-றையாக, அரசுப்பணிக்கு வந்த எனக்கு, வழங்கிய அங்கீகாரம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது பள்ளிக்கும் பெருமை.
சித்தோடு, அரசு மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியை நளினா: தமிழுக்காகவும், தழிழ் பணிக்காகவும், உண்மையான உழைப்புக்-காகவும் கிடைத்த பரிசாக, அங்கீகாரமாக நல்லாசிரியர் விருதை ஏற்கிறேன். இதுவரை, 102க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்-றுள்ள நான், மாணவர்களையும் உற்சாகப்படுத்தி பல்வேறு விரு-துகள் பெற்று கொடுத்திருக்கிறேன். இது எப்போதும் தொடரும்.
பவானி, கிழக்கு நகரவை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியை, எஸ்.சிவகாமி வித்யா: இதே பள்ளியில் கடந்த, 30 ஆண்டுக-ளுக்கும் மேலாக பணிபுரியாற்றி, தலைமையாசிரியையாக பொறுப்பு வகிக்கிறேன். நல்லாசிரியர் விருது கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது. இது என் வாழ்வில் சந்தோஷத்தை ஏற்ப-டுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இவர், எம்.எஸ்.சி., பி.எட்., எம்.ஏ., எம்.பில்., பட்டதாரி ஆவர்,
பெருந்துறை, கொங்கு வேளாளர் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்-பள்ளி தலைமையாசிரியை ஷர்மிளா பர்வின்: இப்பள்ளியில் கடந்த, 2007 முதல் பணியாற்றி வருகிறேன். நல்லாசிரியர் விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதை வார்த்தை-களால் வர்ணிக்க முடியாது.
இந்த தருணத்தில், விருது கிடைக்க உதவியாக இருந்த பள்ளி நிர்-வாகத்திற்கும், முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்-கிறேன்.
தத்துவ மேதை சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன்
கோபம் தணிந்தால் ஒரு மனிதனுக்கு அறிவும், அடக்கமும் செல்-வங்களாக வந்து சேரும் என்பர். சென்னையிலிருந்து, 60 கி.மீ., தொலைவில் உள்ளது திருத்தணி. இப்பகுதியில் அமைந்துள்ள கிராமங்கள் பலவற்றில், 'சர்வப்பள்ளி' என்ற கிராமமும் ஒன்று. இந்த கிராமத்தில் தான் ராதாகிருஷ்ணன், 1888 செப்., 5-ம் தேதி பிறந்தார். உலகமே போற்றிய மகாத்மா காந்தி, ஒருமுறை ராதாகி-ருஷ்ணனிடம் உரையாடும் வாய்ப்பு ஏற்பட்டது. அப்போது ராதா-கிருஷ்ணன் ஒரு பேராசிரியராக இருந்தார். ராதாகிருஷ்ணனின் புலமை, தத்துவஞானம், சொல்லாற்றல் ஆகியவற்றை கண்டு மகாத்மா காந்தி வியந்தார்.
சென்னை, பிரசிடென்சி கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருந்த காலத்திலேயே, அவ்வப்போது பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதி வந்தார் ராதாகிருஷ்ணன். அவர் எழுதிய கட்-டுரைகள் பலரை படிக்கவும், சிந்திக்கவும் துாண்டின. புகழ்பரப்பி நின்ற ராதாகிருஷ்ணன் தானாக, எந்த பதவியையும் தேடிப் போக-வில்லை. மாறாக அவரைத் தேடிப் பதவிகள் அணிவகுத்து வந்-தன. இப்படித்தான் கோல்கட்டா பல்கலை கழக பேராசிரியர் பதவி இவரைத் தேடி வந்தது. இங்கிலாந்தில், 1935-ம் ஆண்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்யங்களின் பல்கலை கழகங்கள் மாநாட்டில் ராதாகிருஷ்ணன் ஆற்றிய உரை, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி-யது. வெளிநாட்டில் தங்கியிருந்த போதும் ராதாகிருஷ்ணன் தன்-னுடைய பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளவில்லை. இந்-தியப் பண்பாட்டை மறந்ததும் இல்லை. ஆக்ஸ்போர்ட் பல்-கலைக் கழகம், ராதாகிருஷ்ணனை அழைத்து பேராசிரியர் பத-வியை தந்தது. பிரிட்டிஷ் அகாடமி அவருக்கு, 'பெலோஷிப்' என்ற விருது அளித்து கவுரவித்தது. இவர், 1952-ல் குடியரசு துணைத் தலைவரானார். பத்தாண்டுக்களுக்கு பின், 1962ல் இந்தி-யாவின் குடியரசு தலைவரானார். இந்தியாவின் மிக உயர்ந்த விரு-தான, 'பாரத ரத்னா' விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவரது பிறந்த நாளான செப்., 5 இந்திய நாட்டில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.