/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துவக்கப்பள்ளியில் 12 சூரியாசனங்கள் கற்பிப்பு
/
துவக்கப்பள்ளியில் 12 சூரியாசனங்கள் கற்பிப்பு
ADDED : ஜூலை 17, 2011 02:21 AM
ஈரோடு: தனியார் பள்ளியில் கூட கற்பிக்கப்படாத, உலகளவில் புகழ்பெற்ற, 12 சூரியாசனங்கள், ஈரோடு காசிபாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக கற்றுக் கொடுக்கப்படுகிறது.ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை உடல் ஆரோக்கியம். உடல், உள்ளம், ஆன்மாவை ஒருங்கிணைப்பது, 'யோகா' என்பர்.பல குடும்ப சூழலில் இருந்து வரும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு யோகாக்கலை வழங்க, அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்கள், ஜூலை 8 முதல், 14ம் தேதி வரை தினமும் ஒரு மணி நேரம் தங்கள் பள்ளியில் உள்ள, 6 முதல், எஸ்.எஸ்.எல்.ஸி., வரை உள்ள மாணவ, மாணவியருக்கு யோகாசன கல்வி முகாம் நடத்த அனைத்து மாவட்ட, சி.ஈ.ஓ.,க்கும் பள்ளிக்கல்வி இயக்குர் உத்தரவிட்டார்.உயர் தொடக்கநிலை வகுப்புக்கு நிகராக, ஈரோடு காசிபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி குழந்தைகள் யோகா பயிற்சி பெறுகின்றனர். பாரதிபுரம், கல்யாணசுந்தரம் வீதி, மலைக்கோயில், கே.கே.நகர், சுப்பிரமணியபுரம், வாய்க்கால்மேடு, சாஸ்திரி நகர், விவேகானந்தா நகர், காசிபாளையம் போன்ற பகுதியை சேர்ந்த, 233 குழந்தைகள் இங்கு பயில்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியை சுமதி தலைமையில், 11 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர்.மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு கடந்த ஓராண்டாக இலவசமாக, தனியார் பள்ளிக்கு நிகராக, இப்பள்ளியில், 'யோகா' கற்பிக்கப்படுகிறத. முறையாக பயிற்சி பெற்ற அச்சுதன், வனிதாமணி அச்சுதன் என்ற இருவர் குழந்தைகளுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.
யோகாக்கலை பயிற்சி ஆசிரியர் வணிதாமணி அச்சுதன் கூறியதாவது:இங்கு மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் குழந்தைகளுக்கு எளிமையான ஆசனங்கள் இலவசமாக கற்றுத் தருகிறோம். மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் 'யோகா' கற்றுக் கொடுக்கிறோம். பத்மாசனம், வஞ்ராசனம், எளிமையான ஆசனம், தாடாசனம், உச்சாசனம், சர்வாங்க ஆசனம், மச்சாசனம், தனூராசனம், சக்கராசனம், யோகமித்ரா, சிரசாசனம், பத்மம் பகாசனம், ஹலாசனம், பச்சிமோக்த ஆசனம், ஜானு சிரசானம் என, 20 வகையான ஆசனங்கள் கற்றுத்தருகிறோம்.உலகளவில் சூரியாசனம் மிகவும் முக்கியமானது. நாங்கள், 12 சூரிய ஆசனம் கற்றுத்தருகிறோம். சூரியாசனத்தால் உடம்பில் இருக்கும் அத்தனை நரம்புகளும் செயல்பட்டு, குழந்தைகள் கல்வி கற்கவும், மனதில் பதிய வைக்கவும் ஏதுவாக இப்பயிற்சி அமையும். பொதுவாக இருக்கும் ஆசனங்களில் சில சூரியாசனத்தில் ஒருங்கிணைந்து வரும். பிரமிடு ஆசனம், பத்மாசனம் உள்ளிட்ட ஆசனங்களை கூட குழந்தைகள் செய்து ஆர்வத்துடன் கற்றுக் கொள்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.