/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துவக்கப்பள்ளியில் சேர 12,௦௦௦ பேர் பதிவு
/
துவக்கப்பள்ளியில் சேர 12,௦௦௦ பேர் பதிவு
ADDED : மே 26, 2024 07:18 AM
திருப்பூர் : அரசு பள்ளிகளில் அட்மிஷன் ஏப்ரல் இறுதியில் துவங்கியது.
பள்ளிகள் கோடை விடுமுறை விடும் முன்பே மாணவர் சேர்க்கை துவங்கினாலும் பெற்றோர் அவ்வளவு 'வேகமாக' அக்கறை காட்டவில்லை. ஐந்து முடித்து, ஆறாம் வகுப்பு, 8ம் வகுப்பில் இருந்து 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு முடித்து பிளஸ் 1 வேறு பள்ளியில் இணைய பெற்றோர், மாணவர் ஆர்வம் காட்டினர். மே, 15க்கு பின் பள்ளிகளில் அட்மிஷன் சுறுசுறுப்பாகி உள்ளது. துவக்க, நடுநிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர், நான்கு ஆசிரியர்கள் தினசரி அட்மிஷன் பணிகளை கவனிப்பதால், பெற்றோர், மாணவ, மாணவியர் வந்து விபரங்களை கேட்டுச் செல்கின்றனர்.
மாநகராட்சி பகுதியில் செயல்படும் அரசு பள்ளிகளில் உள்ள மாணவர் சேர்க்கை ஆர்வம், புறநகர் மற்றும் கிராமங்களில் குறைந்தளவே உள்ளதாக, கல்வித்துறையினர் தெரிவிக்கின்றனர். 'கடந்த, 23ம் தேதி வரை மாவட்டத்தில் உள்ள துவக்க பள்ளியில் சேர, 12 ஆயிரத்து, 686 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். பிற பகுதிகளை விட, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள அரசு, மாநகராட்சி பள்ளிகளில் இணைய அதிகளவில் பதிவு நடைபெற்றுள்ளது,' என, சி.இ.ஓ., கீதா தெரிவித்தார்.