/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
14 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் 28 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்
/
14 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் 28 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்
14 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் 28 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்
14 கடைகளுக்கு தலா ரூ.1,000 அபராதம் 28 கிலோ உணவு பொருட்கள் பறிமுதல்
ADDED : ஆக 15, 2024 02:28 AM
ஈரோடு, ஈரோட்டில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள், 14 ேஹாட்டல், பேக்கரிகளில் நடத்திய சோதனையில், 28 கிலோ உணவு பொருட்கள், ஆறு லிட்டர் குளிர்பானம் அழிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில், 10 ரூபாய் மதிப்பிலான குளிர்பானம் குடித்த சிறுமி இறந்தார். இதை தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். இதன்படி ஈரோடு பஸ் ஸ்டாண்ட், மேட்டூர் சாலையில் உள்ள வணிக வளாக கடைகள், ேஹாட்டல், பேக்கரி
களில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கேசவராஜ், செல்வம், அருண் ஆகியோர் சோதனை செய்தனர்.
இதில், 14 கடைகள், பேக்கரிகளில் இருந்து, 28 கிலோ மதிப்பிலான உணவு பொருட்கள், தின்பண்டங்கள் ஆகியவை செய்தி தாள்களில் வைத்திருந்ததாலும், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாததால் பறிமுதல் செய்து அழித்தனர். அத்துடன் ஆறு லிட்டர் குளிர் பானங்களிலும் காலாவதி தேதி இல்லாததால் அவற்றையும் அழித்தனர். 14 கடைகளுக்கும் தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.