sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குடிநீர் தட்டுப்பாட்டால்2 இடங்களில் மறியல்

குடிநீர் தட்டுப்பாட்டால்2 இடங்களில் மறியல்

குடிநீர் தட்டுப்பாட்டால்2 இடங்களில் மறியல்


ADDED : மார் 27, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 01:38 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

குடிநீர் தட்டுப்பாட்டால்2 இடங்களில் மறியல்

சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகேயுள்ள ராஜன்நகர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊர் கஸ்துாரி நகரில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு குடிநீர் வினியோகம் சரிவர இல்லை என்று தெரிகிறது. இந்நிலையில், 60க்கும் மேற்பட்டோர், ராஜன்நகர்-பவானிசாகர் சாலையில் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். சத்தி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, மறியலை கைவிட்டனர். இதனால், 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

* தாளவாடி அருகே நேதாஜி சர்கிள் பகுதிக்கு, ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது. ஊராட்சி அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. நேற்று மதியம், 40 க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தாளவாடி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம், தாளவாடியில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் பங்கேற்றிருந்தார். இந்த சமயத்தில் மக்கள் மறியலில் ஈடுபட்டதால், அதிகாரிகள் திக்குமுக்காடி போயினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us