/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அபிராமி கிட்னி கேரில் 2 மாற்று அறுவை சிகிச்சை
/
அபிராமி கிட்னி கேரில் 2 மாற்று அறுவை சிகிச்சை
ADDED : ஆக 30, 2024 04:16 AM
ஈரோடு: கோபியை சேர்ந்தவர் லட்சுமணன். கடந்த, 23ம் தேதி சாலை விபத்தில் சிக்கி மூளை சாவடைந்தார். அவர் குடும்பத்தினர் உட-லுறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
அபிராமி கிட்னி கேர் மருத்துவமனைக்கு சிறுநீரகம், கல்லீரல், கண்கள் தானம் செய்யப்பட்டது.
லட்சுமணனின் சிறுநீரகம், அபி-ராமி கிட்னி கேர் மருத்துவமனையில் நான்கு ஆண்டுகளாக டயா-லிசிஸ் சிகிச்சை பெற்று வந்த, 53 வயது நோயாளிக்கு, அபிராமி கிட்னி கேர் நிர்வாக இயக்குனரும், சிறுநீரக அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவரான சரவணன் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக பொருத்தினர். இதேபோல் கல்லீரல் பாதிக்கப்பட்ட, 60 வயது நோயாளிக்கு, கல்லீரல் சிறப்பு மருத்துவர் கார்த்திக் மதிவாணன் தலைமையி-லான குழுவினர், லட்சுமணனின் கல்லீரலை வெற்றிகரமாக பொருத்தினர். இருவரும் சிறந்த உடல் நலத்துடன் உள்ளதாக, அபிராமி கிட்னி கேர் நிர்வாக இயக்குனரும், டாக்டருமான சர-வணன் தெரிவித்தார்.

