/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
2017-18 பயிர் காப்பீட்டு தொகை 54 லட்சம் ரூபாய் விடுவிப்பு
/
2017-18 பயிர் காப்பீட்டு தொகை 54 லட்சம் ரூபாய் விடுவிப்பு
2017-18 பயிர் காப்பீட்டு தொகை 54 லட்சம் ரூபாய் விடுவிப்பு
2017-18 பயிர் காப்பீட்டு தொகை 54 லட்சம் ரூபாய் விடுவிப்பு
ADDED : செப் 01, 2024 03:59 AM
ஈரோடு: கடந்த, 2017-18 ல் பயிர் காப்பீடு செய்து, பயிர் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தற்போது, 54 லட்சம் ரூபாய் இழப்பீடாக பெறப்பட்டு, விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன் கூறியதாவது:இயற்கை இடர்பாடு, விளைச்சல் குறைபாடு, நோய் தாக்கம், வறட்சி, மழை போன்றவற்றால் பயிர் சேதம் ஏற்படும்போது, உரிய இழப்பீடு பெற பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவிக்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நிறுவனங்களை அறிவித்து, அவர்கள் மூலம் காப்பீடு செய்யப்படுகிறது. இழப்பீடு ஏற்பாடும்போது அந்நிறுவனம் ஆய்வு செய்து இழப்பீட்டு தொகையை விடுவிக்கிறது. கடந்த, 2017-18ல் தோட்டக்கலை பயிரில் சேதம் ஏற்பட்ட விவசாயிகளுக்கு தற்போது, 54 லட்சம் ரூபாய் இழப்பீடு பெறப்பட்டு, பயனாளிகளின் வங்கி கணக்கில் தொகையை செலுத்தி உள்ளோம். இவ்வாறு கூறினார்.