/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ள்ளி செல்ல 3.5 கி.மீ., துாரம் நடைபயணம்; பஸ் வசதி கேட்டு மனு
/
ள்ளி செல்ல 3.5 கி.மீ., துாரம் நடைபயணம்; பஸ் வசதி கேட்டு மனு
ள்ளி செல்ல 3.5 கி.மீ., துாரம் நடைபயணம்; பஸ் வசதி கேட்டு மனு
ள்ளி செல்ல 3.5 கி.மீ., துாரம் நடைபயணம்; பஸ் வசதி கேட்டு மனு
ADDED : செப் 03, 2024 04:19 AM
ஈரோடு: ஈரோடு
மாவட்டம் பெருந்துறை தாலுகா காஞ்சிகோவில் அருகே தங்கமேடு,
ஸ்டார்த்தி நகர், அய்யன்வலசு பகுதியை சேர்ந்த, குழந்தைகள் மற்றும்
பெற்றோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி
கூறியதாவது:
காஞ்சிகோவில் அருகே தங்கமேடு, ஸ்டார்த்தி நகர்,
மல்லம்பாளையம், அய்யன்வலசு பகுதியில், 60க்கும் மேற்பட்ட பள்ளி
குழந்தைகள், காஞ்சிகோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில்
படிக்கின்றனர். இன்னும் சில குழந்தைகள் வேறு பள்ளிகளிலும்
படிக்கின்றனர். நாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து, 3.5 கி.மீ., துாரம்
நடந்து வந்து, அரசு பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. அவ்வழியாக பஸ்
போக்குவரத்து இல்லை. பள்ளி குழந்தைகள் மற்றும் பிற பயணம் செல்வோர்
நலனுக்காக, காலை மற்றும் மாலையில் பஸ் இயக்க வேண்டும். கடும் மழை, வெயில்
காலங்களில் நடந்து செல்வது சிரமமாக உள்ளது. இவ்வாறு கூறினர்