/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குறைதீர் கூட்டத்தில் 372 மனுக்கள் ஏற்பு
/
குறைதீர் கூட்டத்தில் 372 மனுக்கள் ஏற்பு
ADDED : ஜூலை 09, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது.
மகளிர் உரிமை தொகை, குடிநீர் இணைப்பு, ஓய்வூதியம், இலவச வீட்டு மனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 372 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 6 பேருக்கு சட்டப்பூர்வ பாதுகாவலர் நியமன சான்றிதழ், ஒரு மாற்றுத்திறனாளிக்கு திருமண நிதியுதவியாக, 8 கிராம் தங்கம் வழங்கப்பட்டது.