/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.3.85 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
/
ரூ.3.85 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
ADDED : ஜன 07, 2025 02:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.3.85 லட்சத்துக்கு விளைபொருள் ஏலம்
அந்தியூர், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 4,௦௦௦ காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 36.14 - 50.85 ரூபாய்; தேங்காய் பருப்பு, 55 மூட்டைகள் வரத்தாகி, ஒரு கிலோ, 118.96 - 150.39 ரூபாய்; எள் ஆறு மூட்டை, மக்காச்சோளம் ஒன்பது மூட்டை, பச்சைப்பயிறு, தட்டைப்பயிறு தலா ஏழு மூட்டை வரத்தானது. உளுந்து, 14 மூட்டை வரத்தாகி, ஒரு கிலோ, 74.53 - 84.31 ரூபாய் வரை விலை போனது. நரிப்பயிறு ஒரு மூட்டை வரத்தானது. அனைத்து வேளாண் விளைபொருட்களும், 3.85 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

