/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகர், மாவட்டத்தில் பரவலாக கொட்டிய மழை மின் கம்பி அறுந்து விழுந்ததில் 4 கால்நடைகள் பலி
/
மாநகர், மாவட்டத்தில் பரவலாக கொட்டிய மழை மின் கம்பி அறுந்து விழுந்ததில் 4 கால்நடைகள் பலி
மாநகர், மாவட்டத்தில் பரவலாக கொட்டிய மழை மின் கம்பி அறுந்து விழுந்ததில் 4 கால்நடைகள் பலி
மாநகர், மாவட்டத்தில் பரவலாக கொட்டிய மழை மின் கம்பி அறுந்து விழுந்ததில் 4 கால்நடைகள் பலி
ADDED : ஆக 30, 2024 01:03 AM
ஈரோடு, ஆக. 30-
ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தில், நேற்றும் வெயில் தாக்கம், கோடை காலம் போல் இருந்தது. இந்நிலையில் ஈரோட்டில் மாலை, 4:15 மணிக்கு மிதமான மழை பெய்யத் தொடங்கியது. சில சமயங்களில் கனமாகவும் கொட்டிய நிலையில், ௭:௪௫ மணிக்கு மழை ஓய்ந்தது.
இந்நிலையில், ௮:௦௦ மணிக்கு மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது.இந்த மழையால் மாநகரில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேட்டூர் சாலையில் வழக்கம்போல் போக்குவரத்து பாதித்து வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் மழையில் நனைந்தப்படியும், குடை பிடித்தும் சென்றனர். கனிராவுத்தர் குளத்தில் நேற்று வாரச்சந்தை நடந்தது. மழையால் மாலை நேர வியாபாரம் நடக்காததால், வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.
* அம்மாபேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான சிங்கம்பேட்டை, நெருஞ்சிப்பேட்டை, பூதப்பாடி ஆகிய இடங்களில், மாலை, 5:௦௦ மணிக்கு தொடங்கிய கனமழை, அரை மணி நேரத்துக்கும் மேலாக அதே அளவில் கொட்டி தீர்த்தது.
சென்னம்பட்டி, சனிசந்தை, குருவரெட்டியூர், ஜரத்தல், வெள்ளித்திருப்பூர், எண்ணமங்கலம், வரட்டுப்பள்ளம் பகுதியிலும், இருபது நிமிடத்துக்கும் மேலாக கனமழையும், பவானி, குருப்பநாய்க்கன்பாளையம், ஊராட்சிக்கோட்டை, காலிங்கராயன்பாளையம் பகுதியில் லேசான மழையும்
பெய்தது.
* பெருந்துறையில் மதியம், 3:30 மணி முதல் 4:00 மணி வரை லேசான மழை பெய்தது. பின் இரவு, 7:00 மணிக்கு தொடங்கிய மழை, அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது.
2 பசு, 2 எருமை பலி
பவானி அருகே சன்னியாசிபட்டி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நல்லமுத்து, 65; விவசாயியான இவர் கால்நடை வளர்த்து வருகிறார். வீட்டுக்கு முன்புறம் திறந்தவெளியில் இரண்டு எருமை, நான்கு பசு மாடுகளை நேற்று மாலை கட்டி வைத்திருந்தார். மாலை, ௫:௦௦ மணியளவில் அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
அப்போது மின் கம்பி அறுந்து கால்நடைகள் மீது விழுந்தது. இதில் இரண்டு பசு மாடு, இரண்டு எருமை சம்பவ இடத்தில் பலியாகி விட்டன. இறந்து போன கால்நடைகளின் மதிப்பு, 3.50 லட்சம் ரூபாய் இருக்கும். நான்கும் சினையாக இருந்ததாக, நல்லமுத்து கண்ணீர் மல்க தெரிவித்தார்