/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜி.எச்.,ல் 4 ஒப்பந்த பணியாளர் 'சஸ்பெண்ட்' காத்திருப்பு போராட்டம் நடத்தியவர் மயக்கம்
/
ஜி.எச்.,ல் 4 ஒப்பந்த பணியாளர் 'சஸ்பெண்ட்' காத்திருப்பு போராட்டம் நடத்தியவர் மயக்கம்
ஜி.எச்.,ல் 4 ஒப்பந்த பணியாளர் 'சஸ்பெண்ட்' காத்திருப்பு போராட்டம் நடத்தியவர் மயக்கம்
ஜி.எச்.,ல் 4 ஒப்பந்த பணியாளர் 'சஸ்பெண்ட்' காத்திருப்பு போராட்டம் நடத்தியவர் மயக்கம்
ADDED : ஜூலை 28, 2024 04:26 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 4 ஒப்பந்த பணியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதுடன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர் மயங்கினார்.
ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், 'க்யூ.பி.எம்.எஸ்.,' என்ற ஒப்பந்த நிறுவனத்தின் கீழ், 230 ஒப்-பந்த பணியாளர்கள் 'ஹவுஸ் கீப்பிங்' பணி செய்கின்றனர். துாய்-மைப்பணி, காவலர், வார்டுகளை துாய்மையாக வைத்திருந்தல், சமைத்தல், துவைத்தல், எலக்ட்ரீஷியன் உட்பட பல்வேறு பணி-களில் ஈடுபடுகின்றனர்.
ஆனால், டாக்டர்கள், செவிலியர்கள், உயரதிகாரிகள் தங்கள் சொந்த வேலைகளுக்கும், தாங்கள் வேண்டிய பணிகளுக்கும் ஈடு-படுத்துகின்றனர். இவ்வாறு ஈடுபடுத்தப்படும் பணியாளர்களை, நோயாளிகள், அவர்களுடன் வருவோர், பொது அமைப்பினர் வீடியோ, போட்டோ எடுத்து சமூக வெளியில் விடுவதால், மருத்-துவமனை நிர்வாகத்துக்கு சிக்கல் எழுகிறது.
இதுபற்றி விசாரித்து, தவறு செய்யும் டாக்டர், செவிலியர்களை விட்டுவிட்டு, தற்காலிக பணியாளர்களை சஸ்பெண்ட், பிற அரசு மருத்துவமனைக்கு இடமாற்றம், நிரந்தர பணி நீக்கத்துக்கு ஆளாக்குகின்றனர்.
இதன்படி மூன்று நாட்களுக்கு முன் ஒப்பந்த பணியாளர்கள் சண்-முகம், வேலுசாமி, பிரகாஷ், பூங்கொடி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுபற்றி விளக்கம் தெரிவிக்கவும், தங்களிடம் விசாரிக்காமல் நடவடிக்கை எடுத்ததாக கூறி, உறைவிட மருத்-துவர் சசிரேகா அறைக்கு நேற்று முன்தினம் சென்றனர். அவரை சந்திக்க இயலாததால், அறைக்கு வெளியே காத்திருப்பு போராட்-டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் நேற்று காலை வேலுசாமி என்-பவர் திடீரென மயக்கம் அடைந்து, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பணியாளர்கள் தரப்பில் கூறியதாவது: தங்களுக்கான பணி தவிர பிற பணிகளை செய்ய மறுத்தால், நடவடிக்கை எடுக்கின்றனர். விசாரணை கூட நடத்துவதில்லை. தவறு செய்யும் டாக்டர், செவி-லியர்கள், பிற அலுவலர்களுக்கு நிர்வாகமும், ஒப்பந்த நிறுவ-னமும் ஆதரவாக இருந்து கொண்டு, பணியாளர்களை பழி வாங்-குகின்றனர். இவ்வாறு கூறினர்.
இப்பிரச்னை குறித்து தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

