/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புது மாப்பிள்ளையை கடத்திய 4 பேர் கைது
/
புது மாப்பிள்ளையை கடத்திய 4 பேர் கைது
ADDED : ஜூலை 12, 2024 09:54 PM
ஈரோடு:ஈரோடு, மாணிக்கம்பாளையம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் ரஷியா பானு, 25; இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ஹரிபிரசாத் மகன் நிஷான், 29, என்பவருக்கும் கடந்த 4ம் தேதி இருவீட்டார் சம்மதத்துடன் சென்னையில் திருமணம் நடந்தது.
நிஷான் சென்னையில் ஓட்டல் நடத்துகிறார். திருமணம் முடிந்ததும் ஈரோட்டில் உள்ள ரஷியா பானு வீட்டுக்கு இருவரும் வந்துள்ளனர். கடந்த 10ம் தேதி இரவு வீடருகே உள்ள மளிகைக் கடைக்கு நிஷான் சென்றார். அப்போது, காரில் வந்த சிலர், நிஷானை கடத்திச் சென்றனர்.
இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். சேலம் மாவட்டம் தலைவாசலில், வாகன சோதனை நடத்திய போலீசார் நிஷான் கடத்தப்பட்ட காரை மடக்கினர்.
சென்னையில் 24 வயது பெண்ணுடன் பழகிய நிஷான் அந்தப் பெண்ணை கர்ப்பமாக்கி விட்டு, ரஷியா பானுவை திருமணம் செய்ததும், அந்தப் பெண்ணின் உறவினர்கள், நண்பர்கள், நிஷானை கடத்திச் சென்றதும் விசாரணையில் தெரிந்தது.
செங்கல்பட்டு, மேலக்கோட்டையூர் போலீஸ் குடியிருப்பில் வசிக்கும் சுசில் சுந்தரம், 33, ஜெகதீஷ், 30; சென்னை துரைபாக்கம் திருவள்ளுவர் நகர் மோகன், 32; சென்னை, நீலாங்கரை ராஜேந்திரன் நகர் கணேஷ், 24, ஆகிய 4 பேரையும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.