/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.7 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை திருடிய 4 பேர் கைது..
/
ரூ.7 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை திருடிய 4 பேர் கைது..
ரூ.7 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை திருடிய 4 பேர் கைது..
ரூ.7 லட்சம் மதிப்புள்ள காப்பர் கம்பிகளை திருடிய 4 பேர் கைது..
ADDED : ஆக 09, 2024 03:00 AM
ஈரோடு: ஈரோட்டில், தனியார் நிறுவனத்தில் ஏழு லட்சம் ரூபாய் மதிப்பி-லான காப்பர் கம்பிகளை திருடிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, வெட்டுக்காட்டு வலசு பகுதியை சேர்ந்தவர் சிவபி-ரசாத், 38. கதிரம்பட்டியில் காப்பர் கம்பிகள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில், இருப்பு வைக்கப்பட்டிருந்த காப்பர் கம்பிகள் மாயமாகியிருந்தது. நிறுவ-னத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, கடந்த, 15ல் மர்ம கும்பல் ஒன்று, நிறுவ-னத்திற்குள் நுழைந்து, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகளை திருடி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த, 27ல் ஈரோடு தாலுகா போலீசில் சிவபிரசாத் புகார் அளித்தார். போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
அதில் சேலம் மாவட்டம், காடையாம்பட்டி கோவிந்தாபுரம் முத்தம்பட்டியை சேர்ந்த சின்னகுட்டி மகன் வெற்றிவேல், 32. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி நாகாளம்மன் கோம்-பையை சேர்ந்த சந்திரன் மகன் செல்வம், 29, அதேபகுதியை சேர்ந்த மாது மகன் பழனிவேல், 32, சேலம் மாவட்டம் கோவிந்-தாபுரம் முத்தம்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் கோவிந்தராஜ், 40, என்பது தெரியவந்தது. இவர்கள் நால்வரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 700 கிலோ காப்பர் கம்பிகள், திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மினி ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.