sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கிழக்கு தொகுதியில்46 வேட்பாளர் போட்டிசின்னத்துடன் பட்டியல் வெளியீடு

/

கிழக்கு தொகுதியில்46 வேட்பாளர் போட்டிசின்னத்துடன் பட்டியல் வெளியீடு

கிழக்கு தொகுதியில்46 வேட்பாளர் போட்டிசின்னத்துடன் பட்டியல் வெளியீடு

கிழக்கு தொகுதியில்46 வேட்பாளர் போட்டிசின்னத்துடன் பட்டியல் வெளியீடு


ADDED : ஜன 22, 2025 01:28 AM

Google News

ADDED : ஜன 22, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிழக்கு தொகுதியில்46 வேட்பாளர் போட்டிசின்னத்துடன் பட்டியல் வெளியீடு

ஈரோடு,: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல், சின்னத்துடன் நேற்று நள்ளிரவில் வெளியிடப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட, 58 வேட்பாளர்கள், 65 மனு தாக்கல் செய்தனர். 3 பேர் மனு தள்ளுபடியுடன், 8 பேர் விலகி கொண்டனர். இதனால், 47 வேட்பாளர்கள் மனு இறுதியாக இருந்தது. இவர்களுக்கு நேற்று முன்தினம் சின்னம் ஒதுக்கும்போது, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த பத்மாவதி என்ற வேட்பாளர், மனுவை அனுமதிக்க சுயேட்சைகள் எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணைய விதிப்படி பிற மாநில வாக்காளர், போட்டியிட இயலாது என்ற அடிப்படையில் அவரது மனு நிறுத்தப்பட்டது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி நள்ளிரவு, 1:00 மணிக்கு பத்மாவதியின் மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் மணீஷ் நிராகரித்துவிட்டு, 46 வேட்பாளர்கள் கொண்டு இறுதி பட்டியலை, நள்ளிரவு, 3:30 மணிக்கு அறிவித்தார்.

வேட்பாளர்கள், அவரது கட்சி, சின்னம் விபரம்:

வேட்பாளர் பெயர் சின்னம்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்

வி.சி.சந்திரகுமார் (தி.மு.க.,) உதயசூரியன்

மா.சி.சீதாலட்சுமி (நா.த.க.,) ஒலி வாங்கி

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள்

முனி ஆறுமுகம் (பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி) மின் கலவிளக்கு

ஆனந்த சுப்ரமணி (மறுமலர்ச்சி ஜனதா கட்சி) மின் கம்பம்

எம்.கந்தசாமி (நாடாளும் மக்கள் கட்சி) ஆட்டோ ரிக்ஷா

ப.சவிக்தா (சாமானிய மக்கள் நலக்கட்சி) மோதிரம்

பொ.செல்லபாண்டியன் (தேசிய மக்கள் சக்தி கட்சி) ஷூ

வெ.செளந்தர்யா (சமாஜ்வாடி கட்சி) மிதிவண்டி

எஸ்.தர்மலிங்கம் (இந்திய கண சங்கம் கட்சி) வெண்டைக்காய்

த.பிரபாகரன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) பலாப்பழம்

சு.மதுரைவிநாயகம் (விரோ கி விர் இந்தியன் கட்சி) தலை கவசம்

எஸ்.முத்தையா (தாக்கம் கட்சி) தீப்பெட்டி

கு.முனியப்பன் (அனைத்து ஓய்வூதியதாரர்கள் கட்சி) வளையல்கள்

சுயேட்சைகள்

அக்னி ஆழ்வார் 7 கதிர்களுடன் கூடிய பேனா முனை

அமுதரசு தென்னந்தோப்பு

வே.செ.ஆனந்த் கப்பல்

பா.இசக்கிமுத்து நாடார் சீர்வளி சாதனம்

சி.ரவி அலமாரி

ந.ராமசாமி பேனா தாங்கி

க.கலையரசன் பிரஷர் குக்கர்

ம.வி.கார்த்தி நடைவண்டி

சா.கிருஷ்ணமூர்த்தி பலுான்

ஜெ.கோபாலகிருஷ்ணன் மட்டை பந்தடி வீரர்

கு.அ.சங்கர்குமார் மணியாரம்

ரா.சத்யா வார்ப்பட்டை

மா.சாமிநாதன் வாயு சிலிண்டர்

ரா.சுப்பிரமணியன் பென்ச்

மூ.ரா.செங்குட்டுவன் சாலை உருளை

டி.எஸ்.செல்லகுமார் மிதிவண்டி காற்றடிக்கும் குழாய்

நா.தனஞ்ஜெயன் இரட்டை தொலைநோக்காடி

ரா.திருமலை பரிசுப்பெட்டி

ஏ.நுார்முகம்மது பிஸ்கெட்

ம.பஞ்சாசரம் கிரிக்கெட் மட்டை

கே.பத்மராஜன் டயர்கள்

கா.பரமசிவம் கரும்பலகை

செ.பரமேஸ்வரன் படகோட்டியுடன் கூடிய பாய்மரப்படகு

வி.பவுல்ராஜ் வைரம்

என்.பாண்டியன் பெட்டி

சு.மதுமதி ரொட்டி

எச்.முகமமது கைபீர் ரொட்டி சுடும் கருவி

கு.முருகன் செங்கல்

ரா.ராஜசேகரன் கைப்பெட்டி

சி.ராஜமணிக்கம் புருசு

ரா.லோகநாதன் வாளி

லோகேஷ் சேகர் கேக்

சே.வெண்ணிலா கணக்கீட்டும் பொறி

*47வது பட்டனில் நோட்டா இடம் பெறும்.






      Dinamalar
      Follow us