/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
5 நாள் வேலை திட்டம் கோரிவங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
/
5 நாள் வேலை திட்டம் கோரிவங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 08, 2025 02:40 AM
5 நாள் வேலை திட்டம் கோரிவங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு:வங்கிகளில் ஐந்து நாள் வேலைதிட்டத்தை அமல்படுத்த வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கிகளின் நிரந்தர பணிகளை வெளியாட்களிடம் ஒப்படைக்க கூடாது. வங்கி துறையில் தொழிலாளர் விரோதப்போக்கை கைவிட வேண்டும். தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். வங்கிகளில் ஐந்து நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணிக்கொடை உச்ச வரம்பை, 25 லட்சமாக அதிகரித்து வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வங்கி ஊழியர் சங்க தலைவர் பாக்கியகுமார் தலைமை வகித்தார்.