/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., பெண் நிர்வாகி மீது ரூ.5 லட்சம் மோசடி புகார்
/
தி.மு.க., பெண் நிர்வாகி மீது ரூ.5 லட்சம் மோசடி புகார்
தி.மு.க., பெண் நிர்வாகி மீது ரூ.5 லட்சம் மோசடி புகார்
தி.மு.க., பெண் நிர்வாகி மீது ரூ.5 லட்சம் மோசடி புகார்
ADDED : மே 14, 2024 06:03 AM
ஈரோடு : ஈரோடு, கிருஷ்ணம்பாளையம், ஜீவா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், 40; சுமை தூக்கும் தொழிலாளி. தன் குடும்பத்தினருடன் எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று அளித்த புகார் மனுவில், 'பவானியை சேர்ந்த தி.மு.க., வடக்கு மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் சுமதியிடம், மாதம், 25,000 ரூபாய் என, 2020 செப்டம்பர் முதல், 2022 மே வரை ஏலச்சீட்டு செலுத்தினேன்.
'தவணை முதிர்வடைந்தும் சீட்டுத்தொகை, 5 லட்சம் ரூபாய் தராமல் காலம் தாழ்த்தினார். பணத்தை கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தார். உரிய விசாரணை நடத்தி, பணத்தை மீட்டுத்தர வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
சுமதி கூறுகையில், ''எனக்கு வர வேண்டிய 1.75 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதால் பணத்தை தர முடியவில்லை. பணம் தர மாட்டேன் என கூறவில்லை. செந்தில்குமார் தான், 40 பேருடன் என் வீட்டுக்கு வந்து ரகளை செய்தார். நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்வதாக கூறி சென்றார். எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்,'' என்றார்.

