நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், திங்கள்கிழமை தோறும் நடக்கும் குறைதீர் கூட்டம், லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறையால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில், மக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை போட்டு செல்கின்றனர். நேற்றும் வீட்டுமனை பட்டா, போலீஸ் நடவடிக்கை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வழங்க கோருதல் என, 50 பேர் மனுக்களை பெட்டியில் போட்டு சென்றனர்.

