/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓட்டுச்சாவடிக்கு தேவைப்படும் 64 பொருள் ஒன்றாக தொகுக்கும் பணி தீவிரம்
/
ஓட்டுச்சாவடிக்கு தேவைப்படும் 64 பொருள் ஒன்றாக தொகுக்கும் பணி தீவிரம்
ஓட்டுச்சாவடிக்கு தேவைப்படும் 64 பொருள் ஒன்றாக தொகுக்கும் பணி தீவிரம்
ஓட்டுச்சாவடிக்கு தேவைப்படும் 64 பொருள் ஒன்றாக தொகுக்கும் பணி தீவிரம்
ADDED : ஏப் 09, 2024 01:47 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் எட்டு சட்டசபை தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான ஸ்டேஷனெரி மற்றும் பயன்பாட்டு பொருட்களை தொகுத்து, சாக்கில் ஒன்றாக தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. தேர்தல் பிரிவு சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இப்பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து தேர்தல் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: அனைத்து ஓட்டுச்சாவடிக்கும், அந்தந்த ஓட்டுச்சாவடிக்கான வாக்காளர் பட்டியல் விபர நகல்கள், ஸ்டாம்ப் பேட், சீல் வைப்பதற்கு தீப்பெட்டி, எழுதுவதற்கான கிளிப்புடன் கூடிய அட்டை, 'உள்ளே, வெளியே, போலீங் ஏஜென்ட், நீங்கள் கேமராவால் கண்காணிக்கப்படுகிறீர்கள், ஆண்கள், பெண்கள்' என்ற எழுத்துகள் கொண்ட ஸ்டிக்கர், பென்சில், நீலம், சிவப்பு, சில்வர் ஒயிட் பால்பாயின்ட் பேனா, வெள்ளை பேப்பர், பின்கள், சீல் வைக்க உதவும் வேக்ஸ், பசை, மெழுகுவர்த்தி, பிளேடு, கார்பன் பேப்பர், எண்ணெய் கொட்டப்பட்டால் அவற்றை அகற்றுவதற்கான துணி, பேக்கிங் செய்வதற்கான பேப்பர், பிளாஸ்டிக் பாக்ஸ், கழிவுகளை போட்டு வைப்பதற்கான பிளாஸ்டிக் பேரல், மை கூடு, ரப்பர் பேன்ட், டேப் உள்ளிட்ட, 64 பொருட்களை சேகரிக்கின்றனர்.ஒரு சாக்குப்பை மற்றும் பிளாஸ்டிக் பேரலில் போட்டு தயார்படுத்தப்படுகிறது. 18ம் தேதி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் இந்த பொருட்களும் அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கூறினர்.

