/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சட்ட விரோத மது விற்பனை 7 பேர் அதிரடி கைது
/
சட்ட விரோத மது விற்பனை 7 பேர் அதிரடி கைது
ADDED : மே 02, 2024 07:33 AM
ஈரோடு : ஈரோடு மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, சட்டம் - ஒழுங்கு போலீசார், நேற்று முன்தினம் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், சட்ட விரோத மதுபான விற்பனை குறித்து ஆய்வு நடத்தினர்.
வெள்ளிதிருப்பூர் அடுத்த முரளி சுடுகாடு பகுதியில் மது விற்ற தனக்கொடி, 67, திங்களூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வாய்க்கால் பள்ளத்தில் வெள்ளியங்கிரி, கடத்துார் போலீஸ் எல்லையில் நம்பியூர் - கோவில்புதுார் ராஜேந்திரன்,42, சத்தி உக்கரம் காளிகுளம் சஞ்சீவ்குமார், 30, கணேசன், 50, தமிழரசு மகன் அரவிந்த், 23, ரமேஷ் மகன் அருண்குமார், 21, என, 7 பேரை போலீசார் கைது
செய்தனர்.
இவர்களிடம் இருந்து ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

