/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம் பா.ஜ.,வினர் 75 பேர் கைது
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம் பா.ஜ.,வினர் 75 பேர் கைது
ADDED : மே 11, 2024 07:22 AM
ஈரோடு : ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், சூரம்பட்டி நால்ரோடு பகுதியில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. தடையை மீறி பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் வேதானந்தம் தலைமை வகித்தார்.
காங்., மூத்த தலைவர் சாம் பிட்ரோடா, 'தென் நாட்டவர்கள் ஆப்பிரிக்கர்கள் போன்ற நிறத்தை உடையவர்கள்' என பேசியதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
முன்னாள் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், ஈரோடு பார்லிமென்ட் பொறுப்பாளர் பழனிசாமி, மாவட்ட பொருளாளர் சுதர்சனன் உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, 15 பெண்கள் உட்பட, 75 பேரையும் போலீசார் கைது செய்தனர்.