/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கருங்கல்பாளையம் சந்தையில்90 சதவீத மாடுகள் விற்பனை
/
கருங்கல்பாளையம் சந்தையில்90 சதவீத மாடுகள் விற்பனை
ADDED : ஏப் 04, 2025 01:20 AM
கருங்கல்பாளையம் சந்தையில்90 சதவீத மாடுகள் விற்பனை
ஈரோடு:ஈரோடு, கருங்கல்பாளையத்தில் நேற்று கால்நடை சந்தை நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடைகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
சந்தையில், 6,000 முதல், 23,000 ரூபாய்க்கு, 60 கன்று; 23,000 முதல், 70,000 ரூபாய்க்கு, 250 எருமை; 23,000 முதல், 80,000 ரூபாய்க்கு, 350 பசு மாடு; 65,000 ரூபாய்க்கு மேலான விலையில் முழு கலப்பின மாடுகளும் விற்பனைக்கு வந்தன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்கி சென்றனர். 90 சதவீதம் கால்நடை விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
* புன்செய்புளியம்பட்டியில் நேற்று நடந்த கால்நடை சந்தைக்கு, 250 வெள்ளாடு, 150க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் விற்பனைக்கு வந்தன. ஐந்து முதல், 10 கிலோ வரையிலான வெள்ளாடு, 4,500 முதல், 8,000 ரூபாய்; ஐந்து முதல், 10 கிலோ செம்மறி ஆடு, 3,500 முதல் 7,000 ரூபாய் வரை விலை போனது. கோழி மற்றும் சேவல்கள், 1,000 ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது.
ஆடு, சேவல்கள், 30 லட்சம் ரூபாய்க்கு விற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.