/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
90 வாகனங்கள் ரூ.30 லட்சத்துக்கு ஏலம்
/
90 வாகனங்கள் ரூ.30 லட்சத்துக்கு ஏலம்
ADDED : பிப் 23, 2025 01:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
90 வாகனங்கள் ரூ.30 லட்சத்துக்கு ஏலம்
ஈரோடு:ஈரோடு மாவட்ட மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், ஆணைக்கல்பாளையம் ஆயுதப்படை மைதானத்தில் நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டது. ஏலத்துக்கு, 11 நான்கு சக்கர வாகனங்கள், 94 டூவீலர்கள் வந்தன. இதில் ஏழு நான்கு சக்கர வாகனங்கள், 16 லட்சம் ரூபாய்; 83 இரு சக்கர வாகனங்கள், 14 லட்சம் ரூபாய் என, 90 வாகனங்கள், 30 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனதாக, மதுவிலக்கு போலீசார் தெரிவித்தனர்.