/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாட்டுச்சந்தையில் 90 சதவீதம் விற்பனை
/
ஈரோடு மாட்டுச்சந்தையில் 90 சதவீதம் விற்பனை
ADDED : ஜூன் 28, 2024 01:47 AM
ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை நேற்று கூடியது. தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து மாடுகளை அழைத்து வந்தனர். 7,000 ரூபாய் முதல், 24,000 ரூபாய் மதிப்பில் 100 கன்றுகள் விற்பனையானது. 24,000 ரூபாய் முதல், 65 ரூபாய் மதிப்பில், 200 எருமை மாடுகள், 35,000 ரூபாய் முதல், 80,000 ரூபாய் மதிப்பில், 350 பசு மாடுகளை விற்பனைக்கு அழைத்து வந்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மஹராஷ்டிரா மாநில வியாபாரிகள், விவசாயிகள் மாடுகளை வாங்கி சென்றனர்.
லோக்சபா தேர்தல், தொடர் மழையால் வெளி மாநில வியாபாரிகள், விவசாயிகள் மூன்று மாதங்களாக குறைவாகவே வந்தனர். இதனால் விற்பனை மந்தமாக காணப்பட்டது. தற்போது வெளி மாநில வியாபாரிகள், விவசாயிகள் அதிகம் வருவதால் மாடுகள் கூடுதலாக விற்பனையாகிறது. நேற்று வரத்தான மாடுகளில், 90 சதவீதம் விற்றதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.