/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
10ம் வகுப்பு தேர்வில் 95.08 சதவீத தேர்ச்சி: மாநில அளவில் ஈரோட்டுக்கு 7வது இடம்
/
10ம் வகுப்பு தேர்வில் 95.08 சதவீத தேர்ச்சி: மாநில அளவில் ஈரோட்டுக்கு 7வது இடம்
10ம் வகுப்பு தேர்வில் 95.08 சதவீத தேர்ச்சி: மாநில அளவில் ஈரோட்டுக்கு 7வது இடம்
10ம் வகுப்பு தேர்வில் 95.08 சதவீத தேர்ச்சி: மாநில அளவில் ஈரோட்டுக்கு 7வது இடம்
ADDED : மே 11, 2024 11:41 AM
ஈரோடு: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், மாநில அளவில், ஈரோடு மாவட்டம் ஏழாமிடத்தை பிடித்தது.
ஈரோடு மாவட்டத்தில், 356 பள்ளிகளை சேர்ந்த, 12,404 மாணவர், 12,422 மாணவியர் என, 24,826 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். நேற்று தேர்வு முடிவு வெளியானது. இதில், 11,548 மாணவர், 12,057 மாணவியர் என, 23,605 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 95.08 சதவீதமாகும். இது கடந்த ஆண்டை விட, 0.55 சதவீதம் கூடுதலாகும். மாநில அளவில் ஏழாமிடத்தை ஈரோடு மாவட்டம் பெற்றது.
மொத்தம், 160 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்தாண்டு, 136 பள்ளிகள், 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தன. 175 அரசு பள்ளிகளில் தேர்வெழுதிய, 12,776 பேரில், 11,816 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 92.05 சதவீதம். நகரவை பள்ளிகள், 9,ல் 196 பேர் தேர்வு எழுதியதில், 173 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 86.35 சதவீதம். நிதியுதவி பெறும் பள்ளிகள், 27ல் தேர்வு எழுதிய, 2,432 பேரில், 2,333 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இது, 95.91 சதவீதம். நலத்துறை பள்ளிகள், 5ல் தேர்வு எழுதிய, 152 பேரில், 134 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 84.71 சதவீதம். சுயநிதி பள்ளிகள், 25ல் தேர்வு எழுதிய, 1,510 பேரில், 1,461 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 97.71 சதவீதமாகும். மெட்ரிக் பள்ளிகள், 115ல், 7,760 பேர் தேர்வு எழுதியதில், 7,688 பேர் தேர்ச்சி பெற்றனர். இது, 98.69 சதவீதம்.
மொத்தம், 356 பள்ளிகளில், 160 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசு பள்ளிகள் - 43, அரசு உதவி பெறும் பள்ளிகள் - 4, நகரவை பள்ளி - 1, பகுதியாக உதவி பெறும் பள்ளிகள் - 5, மெட்ரிக் பள்ளிகள் - 91, சுயநிதி பள்ளிகள் - 13, நலப்பள்ளிகள் - 2 ஆகும்.