/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அணையில் மீன் பிடித்த 16 வயது சிறுவன் பலி
/
அணையில் மீன் பிடித்த 16 வயது சிறுவன் பலி
ADDED : ஆக 27, 2024 02:43 AM
சென்னிமலை: திருப்பூர் மாவட்டம் தாராபுரம், செல்லாம்பாளையம், காந்திநகரை சேர்ந்த ஆறுமுகம் மகன், சாமுவேல், 16; ஆறுமுகம் தனது குடும்பத்துடன் காங்கேயம் அருகே கொங்கார்பாளையத்தில் ஒரு தேங்காய் களத்தில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
சாமுவேல், தனது அண்ணன் சிவக்குமாருடன் மீன் பிடிக்க, ஒரத்துப்பாளையம் அணைக்கு நேற்று முன்தினம் சென்றார். தண்ணீர் திறந்து விடும் மதகு அருகில் தரைப்பாலத்தில் நின்று துாண்டிலில் மீன் பிடித்தனர். அப்போது சிவக்குமார் தவறி தண்ணீரில் விழுந்துள்ளார். அண்ணனை காப்பாற்ற சாமுவேல் குதித்துள்ளார். சிவக்குமார் நீந்தி கரைக்கு வந்த நிலையில், நீச்சல் தெரியாத சாமுவேல் தண்ணீரில் மூழ்கினார். சென்னிமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடியதில், குதித்த இடத்தில் இருந்து, 100 மீட்டர் தொலைவில் சாமுவேல் சடலத்தை மீட்டனர்.

