/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடுக்கு சுற்றுலா வந்த தி.மு.க., பிரமுகர் மரணம்
/
ஈரோடுக்கு சுற்றுலா வந்த தி.மு.க., பிரமுகர் மரணம்
ADDED : ஜூன் 06, 2024 01:09 AM
ஈரோடு:ஈரோடுக்கு சுற்றுலா வந்த புதுக்கோட்டை மாவட்ட, தி.மு.க., இளைஞர் அணி அமைப்பு செயலாளர் உடல் நலக்குறைவால் இறந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை சுங்கப்பட்டியை சேர்ந்தவர் ஸ்டாலின், 43. புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் மற்றும் தி.மு.க., இளைஞர் அணி அமைப்பு செயலாளர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த, 3 மாலை வீட்டில் இருந்து புறப்பட்டு, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்க்க நண்பர்களுடன் வந்துள்ளார்.
கடந்த, 4 மதியம் ஸ்டாலின் அசைவ உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் ஒயின் அருந்தியுள்ளார். அதன் பின் நண்பர்கள் ஊருக்கு கிளம்பினர். ஸ்டாலின் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், வில்லரசம்பட்டி பூஞ்சகாட்டு தோட்டத்தில் உள்ள நண்பர் வீட்டில் இரவு தங்கி துாங்கினார். ஊருக்கு செல்வதற்காக நேற்று காலை அவரை எழுப்பினர். அப்போது பேச்சு, மூச்சின்றி கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
ஈரோடு அரசு மருத்துவமனையில் இருந்து, பிரேத பரிசோதனைக்கு பின் அவரது சொந்த ஊருக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
...

