/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின் கம்பியில் உரசியதால் தேங்காய் நார் வேனில் தீ
/
மின் கம்பியில் உரசியதால் தேங்காய் நார் வேனில் தீ
ADDED : மே 22, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் : தாராபுரத்தை அடுத்த அம்மாபட்டியை சேர்ந்தவர் கருப்புசாமி, 46; ஈச்சர் வாகனத்தில் தேங்காய் நார் ஏற்றிக்கொண்டு, திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு நேற்று மதியம் புறப்பட்டார்.
தாராபுரத்தை அடுத்த ஆலங்காடு பிரிவு அருகே, சாலை நடுவில் சென்ற மின் கம்பியில் நார் உரசியதில் தீப்பிடித்தது. சில நிமிடங்களில் தேங்காய் நார் கொழுந்து விட்டு எரிய துவங்கியது.
தாராபுரம் தீயணைப்பு நிலைய வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், பெரும்பகுதி தேங்காய் நார் எரிந்து விட்டது. பட்டப்பகலில் சாலையில் தீப்பிடித்து எரிந்த வேனால், பரபரப்பு ஏற்பட்டது.

