/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'நெற்றிக்கண்'ணுக்கு தலைவலியோ? தலைகீழாக தொங்குவதால் 'டவுட்'
/
'நெற்றிக்கண்'ணுக்கு தலைவலியோ? தலைகீழாக தொங்குவதால் 'டவுட்'
'நெற்றிக்கண்'ணுக்கு தலைவலியோ? தலைகீழாக தொங்குவதால் 'டவுட்'
'நெற்றிக்கண்'ணுக்கு தலைவலியோ? தலைகீழாக தொங்குவதால் 'டவுட்'
ADDED : செப் 01, 2024 04:06 AM
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் போலீசார், குற்றங்களை தடுக்கும் விதமாக, நகரின் பல இடங்களில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர். இதில் பல குற்றங்களை கேமராக்கள் மூலம் எளிதாக கண்டுபிடித்தனர். ௨௪ மணி நேரமும் கண் விழித்து காவல் காப்பதால், காவல் துறையினர் கொஞ்சம் நிம்மதியாக இருக்க முடிகிறது. குற்றவாளிகளையும் நெருங்க முடிகிறது.
இந்த நிலையில் பவானி ஆற்றுப்பாலம் அருகில் முக்கிய சந்திப்பு இடத்தில் பொருத்தப்பட்டுள்ள ஒரு 'சிசிடிவி' கேமரா கழன்று தொங்கியபடி உள்ளது. பல நாளாக இப்படி உள்ளது. இதை பார்க்கும் வாகன ஓட்டிகள், நெற்றிக்கண்ணுக்கு தலைவலியோ என்னவோ? அதான் தலைகீழாக தொங்குது என 'கமென்ட்' அடித்து செல்கின்றனர்.