/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு கலை கல்லுாரிக்கு 'ஏ பிளஸ்' அந்தஸ்து
/
ஈரோடு கலை கல்லுாரிக்கு 'ஏ பிளஸ்' அந்தஸ்து
ADDED : ஜூன் 23, 2024 02:41 AM
ஈரோடு:ஈரோடு கலை அறிவியல் கல்லுாரிக்கு, நாக் அமைப்பின் 'ஏ பிளஸ்' அந்தஸ்து கிடைத்துள்ளது. மொத்தம், 4 புள்ளிகளுக்கு, 3.48 புள்ளிகளை பெற்று இந்த விருது கிடைத்துள்ளது. இதற்காக கல்லுாரியில் விழா நடந்தது. இதில் தேசிய தர மதிப்பீட்டு நிறுவன ஆய்வுக்கு ஒத்துழைப்பு நல்கிய கல்லுாரி முதல்வர், இயக்குனர், பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர், அலுவலக பணியாளர் மற்றும் துாய்மை பணியாளர் உள்ளிட்ட அனைவருக்கும் கல்லுாரி நிர்வாகம் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் சங்கர சுப்ரமணியன் வரவேற்றார். கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலம் வரவேற்றார். தி முதலியார் எஜுகேஷனல் டிரஸ்ட் தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்து பேசினார். கல்லுாரி செயலர் பாலுசாமி சிறப்புரையாற்றினார். பொருளாளர் விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினார்.
கல்லுாரி நிர்வாகம் சார்பில் ஆசிரியர், பணியாளர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.