ADDED : ஜூன் 30, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தி, சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. கேர்மாளம் செல்லும் சாலையில் நேற்று காலை ஒற்றை யானை சாலையோரத்தில் நீண்ட நேரமாக நின்றது.
அப்போது வந்த ஒரு காரை துரத்தியது. டிரைவரின் சாதுர்யத்தால் நுாலிழையில் தப்பினர். இதனால் அந்த இடத்தை கடந்து வாகனங்கள் செல்லவில்லை. யானை காட்டுக்குள் சென்ற பிறகே, வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்றன.

