/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளஸ் 2 தேர்வை முடித்து மரக்கன்று நட்ட மாணவர்
/
பிளஸ் 2 தேர்வை முடித்து மரக்கன்று நட்ட மாணவர்
ADDED : மார் 24, 2024 01:54 AM
பெருந்துறை, பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 வேளாண்மை பிரிவு மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தேர்வு முடிந்ததும், ஏதாவது ஒரு பொது இடத்தில் ஒன்றுகூடி மரக்கன்று நட்டு வருகின்றனர். கடந்த, 13 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.
நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி முடித்த இப்பிரிவு மாணவர்கள், தேசிய பசுமைப் படை மாணவர்கள், பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், தலைமை ஆசிரியர் ரவி தலைமையில் மகிழம், நெட்டிலிங்கம், வில்வம், அந்திமந்தாரை, பன்னீர் புஷ்பம், நாகலிங்கம் என நுாற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நேற்று நட்டனர். இதற்கான ஏற்பாட்டை வேளாண் ஆசிரியர் கந்தன் செய்திருந்தார்.

