ADDED : ஏப் 25, 2024 05:12 AM
பள்ளிப்பாளையம்: வெயில் தாக்கம் அதிகரிப்பால், பள்ளிப்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
நாமக்கல், ஈரோடு மாவட்டத்தை இணைக்கும் வகையில், பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்டம் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உயர்மட்டம் பாலத்தின் வழியாக, தினமும் ஏராளமான பஸ், லாரி, கார், டூவீலர் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்ந்து சென்ற வண்ணம் காணப்படும்.
தற்போது கோடை வெயிலால், கடந்த சில நாட்களாக வழக்கத்திற்கு மாறாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், காலை, 11:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை மக்களும், வாகன ஓட்டிகளும் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
அந்தளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரிப்பால், பள்ளிப்பாளையம் பகுதி காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள, எப்போதும் பரபரப்பாக காணப்படும் உயர்மட்ட பாலத்தில் வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

