/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., -எம்.பி.,யிடம் அத்துமீறிய தொண்டர்
/
தி.மு.க., -எம்.பி.,யிடம் அத்துமீறிய தொண்டர்
ADDED : ஜூன் 19, 2024 02:03 AM
சத்தியமங்கலம், நீலகிரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க., - எம்.பி., ராஜா, தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாவட்டம் தாளவாடியில் நேற்று காலை மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மாலையில் கடம்பூரிலும், சத்தியமங்கலத்திலும் வாக்காளர்கள், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருக்கும் நன்றி தெரிவித்தார். சத்தியமங்கலம் எஸ்.பி.எஸ்., கார்னரில் திறந்த வேனில் பேசிவிட்டு காரில் கிளம்பியபோது, கட்சி தொண்டர் ஒருவர் ராஜாவின் கையை பிடித்து அழுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கட்சி நிர்வாகிகள், தொண்டரை சுற்றி வளைத்து தாக்க முற்பட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் நன்றி அறிவிக்கும் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.