/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அனுமதியின்றி பட்டாசு விற்ற பெண் கைது
/
அனுமதியின்றி பட்டாசு விற்ற பெண் கைது
ADDED : மே 30, 2024 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில், வெள்ளகோவிலில், அனுமதியின்றி பட்டாசுகளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றத்திற்காக பெண் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் இந்திரா நகரை சேர்ந்த பாக்கியலட்சுமி, 50, என்பவர் தனது கடையில் போதிய பாதுகாப்பு இல்லாமலும், அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை அரசு அனுமதியின்றி, விற்பனைக்காக வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளகோவில் போலீசார், பாக்கியலட்சுமியை கைது செய்தனர்.