/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி தாலுகா அலுவலகத்தில் பழைய இடத்தில் ஆதார் மையம்
/
கோபி தாலுகா அலுவலகத்தில் பழைய இடத்தில் ஆதார் மையம்
கோபி தாலுகா அலுவலகத்தில் பழைய இடத்தில் ஆதார் மையம்
கோபி தாலுகா அலுவலகத்தில் பழைய இடத்தில் ஆதார் மையம்
ADDED : மே 15, 2024 02:19 AM
கோபி:கோபி
தாலுகா அலுவலக வளாகத்தில், குடிமை பொருள் பிரிவு, இ-சேவை மையம், ஒரே
கட்டடத்தில் இயங்கியது. அதன் எதிரே ஆஸ்பட்டாஸ் சீட் வேயப்பட்ட
கொட்டகையில், ஆதார் மையம் இயங்கியது.
இந்த மூன்று கட்டடத்திலும்
மழைநீர் கசிந்தது. இதனால் எட்டு லட்சம் ரூபாயில் பராமரிப்பு பணி, கடந்த
பிப்., மாதம் துவங்கியது. இதனால் குடிமை பொருள் பிரிவு, தாலுகா ஆபீசில்
உள்ள நில அளவையர் பிரிவுக்கும், இ-சேவை மையமும், ஆதார் மையமும், கோட்ட
கலால் அலுவலகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டது.
பராமரிப்பு
பணி முடிந்ததால், குடிமை பொருள் பிரிவு பழைய கட்டடத்துக்கு கடந்த
வாரம் இடமாற்றம் செய்யப்பட்டது. இதேபோல், ஆதார் மற்றும் இ-சேவை
மையமும், பராமரிப்பு முடிந்து, பழைய கட்டடத்துக்கு நேற்று இடமாற்றம்
செய்யப்பட்டது.