/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் ௧௦ம் வகுப்பு தேர்வில் சாதனை
/
ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் ௧௦ம் வகுப்பு தேர்வில் சாதனை
ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் ௧௦ம் வகுப்பு தேர்வில் சாதனை
ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் ௧௦ம் வகுப்பு தேர்வில் சாதனை
ADDED : மே 14, 2024 08:01 AM
ஈரோடு : அந்தியூர் மற்றும் பல்லடம், ஆதர்ஷ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், சாதனை படைத்த மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா, அந்தந்த பள்ளிகளில் நடந்தது. பள்ளி தலைவர் ஐடியல் சிவலிங்கம் தலைமை வகித்தார். தாளாளர் செல்வமணி சிவலிங்கம், 500க்கு 498 மதிப்பெண் பெற்ற தேவ சூரியாவை பாராட்டி பரிசு வழங்கினார்.
கணித பாடத்தில், 20 பேர் 100க்கு நுாறு மதிப்பெண்; அறிவியலில், 19 பேர்; சமூக அறிவியலில், 16 பேர் நுாற்றுக்கு நுாறு மதிப்பெண் பெற்றனர். 495 மதிப்பெண்களுக்கு மேல் 8 பேர்; 490க்கு மேல் 19 பேர்; 480க்கு மேல் 47 பேர்; 470க்கு மேல் 80 பேரும் மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. பிளஸ் ௧ல் சேரும் மாணவ, மாணவியருக்கு, மதிப்பெண் அடிப்படையில் கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படுவதாக, பள்ளி தலைவர் சிவலிங்கம் தெரிவித்தார்.