/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: டி.எஸ்,பி.,
/
டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: டி.எஸ்,பி.,
டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: டி.எஸ்,பி.,
டிரைவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: டி.எஸ்,பி.,
ADDED : செப் 05, 2024 03:14 AM
ஈரோடு: டிரைவரை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டிய நபர் மீது நடவ-டிக்கை எடுக்க கோரி, தனியார் கால் டாக்ஸி டிரைவர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் கால் டாக்சி ஓட்டுனர் சுரேஷ் நேற்று காலை, 10:00 மணியளவில் திண்டல் வித்யா நகரில் வாடகைக்கு நபர்களை ஏற்றிக் கொண்டு பெருந்துறை சென்றார். மீண்டும் அங்கிருந்து அதே நபர்களுடன் ஈரோடு வர முற்பட்டார். அப்போது, பெருந்து-றையில் இருந்த லோக்கல் கார் ஸ்டாண்ட் ஓட்டுனர்கள், கால் டாக்ஸியை நிறுத்தி ஸ்டாண்ட் அருகே இருந்து ஆட்களை வாட-கைக்கு ஏற்றியது குறித்து கேள்வி எழுப்பி தகராறில் ஈடுபட்-டனர். இதில் சுரேஷை அடித்ததாக கூறப்படுகிறது.தகவல் அறிந்த கால் டாக்சி ஓட்டுனர்கள் சிலர், அங்கு சென்று நியாயம் கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த வாலிபர், கத்-தியை காட்டி மிரட்டியுள்ளார். இதையடுத்து கால் டாக்ஸி டிரைவர்கள் ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தனர். பின், 200க்கும் மேற்பட்ட டிரைவர்கள் சோலார் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தங்கள் கார்களை மதியம் 3:45 மணிக்கு நிறுத்தி வைத்தனர். ஈரோடு டவுன் டி.எஸ்.பி. முத்துகுமரன் தலைமை-யிலான போலீசார், கால் டாக்ஸி டிரைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். டிரைவரை தாக்கியவர்கள் மீதும், கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த நபர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என, டி.எஸ்.பி. உறுதியளித்ததால் டிரைவர்கள் கலைந்து சென்றனர்.