/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விநாயகர் சதுர்த்திக்கு கூடுதலாக 270 போலீசார் பாதுகாப்பு
/
விநாயகர் சதுர்த்திக்கு கூடுதலாக 270 போலீசார் பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்திக்கு கூடுதலாக 270 போலீசார் பாதுகாப்பு
விநாயகர் சதுர்த்திக்கு கூடுதலாக 270 போலீசார் பாதுகாப்பு
ADDED : செப் 05, 2024 03:12 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு கூடுதலாக, 270 போலீசார் பாதுகாப்புக்கு வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் (7) கொண்டாடப்பட உள்ளது. விழாவை அமைதியான முறையில் கொண்டாட போலீ-சாரும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஈரோடு மாவட்ட போலீசார் மட்டுமின்றி, கோவை பட்டாலி-யனை சேர்ந்த, 270 போலீசார் கூடுதலாக பாதுகாப்பு பணிக்கு வருகின்றனர்.போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 1,517 விநாயகர் சிலைகள் வைக்கப்பட உள்ளது. 48 நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க, மாவட்ட நிர்-வாகம் அனுமதித்துள்ளது. பிற இடங்களில் கரைக்க கூடாது. பதற்றமான பகுதிகளான சத்தி, புளியம்பட்டி, தாளவாடி, ஈரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இப்பணிகளில் மாவட்டம் முழுக்க, 2,000 பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கூடுதலாக கோவை பட்டாலியனில் இருந்து மூன்று கம்பெனிகளை சேர்ந்த, 270 போலீசார் பாதுகாப்பு பணிக்காக வருகின்றனர்.
இவ்வாறு கூறினர்.