/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த மக்கள்
/
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த மக்கள்
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த மக்கள்
ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் பவானிசாகர் அணை பூங்காவில் குவிந்த மக்கள்
ADDED : ஆக 04, 2024 01:30 AM
புன்செய்புளியம்பட்டி,ஆடிப்பெருக்கு பண்டிகையை கொண்டாட, பவானிசாகர் அணை பூங்காவில் மக்கள் குவிந்தனர்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பொழுதுபோக்கு பூங்காவாக, பவானிசாகர் பூங்கா உள்ளது. பவானிசாகர் அணையை ஒட்டி, 15 ஏக்கர் பரப்பளவில் சிறுவர் படகு வசதி, சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், செயற்கை நீரூற்றுகள் உள்ளன.
ஆடிப்பெருக்கு தினமான நேற்று காலை முதலே பயணிகள் பூங்காவுக்கு வரத் தொடங்கினர். ஈரோடு மட்டுமின்றி, கோவை, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்தனர். பூங்காவில் குழந்தைகள் ஊஞ்சல் ஆடியும் சறுக்குகளில் ஏறி விளையாடியும், குதுாகலித்தனர். சிறுவர்கள் பெற்றோர்களுடன் படகு சவாரி சென்றனர்.
பவானிசாகர் அணைபூங்காவில் கூடுதலாக சிறுவர் ரயில், துாக்கு ஊஞ்சல், பெண்டுலம், வாக்கர் பலுான், சோட்டாபீம், ஜம்பிங் கேம், பலுான் விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளதால், சிறுவர்கள், குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர். பூங்கா முன்புறம், மீன் விற்பனை களை கட்டியது. பூங்கா மற்றும் நீர்த்தேக்க பகுதிகளில் பவானிசாகர் போலீசார் மற்றும் பொதுப்பணித்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.