/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு இசைப்பள்ளியில் சேர்க்கை நாளை துவக்கம்
/
அரசு இசைப்பள்ளியில் சேர்க்கை நாளை துவக்கம்
ADDED : மே 01, 2024 02:13 AM
ஈரோடு:ஈரோடு மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ, மாணவியர் சேர்க்கை நாளை (2) முதல் நடக்க உள்ளது.
இதுபற்றி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:ஈரோடு, பி.பெ.அக்ரஹாரம், பவானி சாலையில் உள்ள அரசு இசைப்பள்ளியில், 12 முதல், 25 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர் சேரலாம். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு, 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம், தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளி படிப்பின் கால அளவு, 3 ஆண்டுகள் ஆகும். அனைத்து மாணவர்களுக்கும் மாதம், 400 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
அனைத்து மாணவ, மாணவியருக்கும் அரசு விடுதி வசதி செய்து தரப்படும். வெளியூர் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வசதி செய்து தரப்படும்.கோவில்களில் தேவார ஓதுவார் பணியில் சேர்ந்திட இப்பள்ளியில் தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என அரசாணை உள்ளது. கூடுதல் விபரத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியரை அணுகலாம்.அல்லது 0424 2294365, 94872 47205 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.