/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்குத்தான் போட்டி பா.ஜ., லிஸ்டிலேயே இல்லை; வேலுமணி
/
அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்குத்தான் போட்டி பா.ஜ., லிஸ்டிலேயே இல்லை; வேலுமணி
அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்குத்தான் போட்டி பா.ஜ., லிஸ்டிலேயே இல்லை; வேலுமணி
அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்குத்தான் போட்டி பா.ஜ., லிஸ்டிலேயே இல்லை; வேலுமணி
ADDED : மார் 31, 2024 04:03 AM
காங்கேயம்: ஈரோடு லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நேற்று நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
வரும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒரு அச்சாரம், 2026ல் பழனிசாமி முதல்வராவது உறுதி. தி.மு.க., மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இரண்டு கோடி உறுப்பினர்கள் உள்ள கட்சியாக அ.தி.மு.க., உள்ளது. உலகத்தில் ஏழாவது இயக்கம்; இந்தியாவில் மூன்றாவது, தமிழ்நாட்டில் முதலாவது இயக்கமாக உள்ளது.
தி.மு.க., நமக்கு பின்னாடி தான். இந்த தேர்தலில் போட்டி அ.தி.மு.க.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் தான். பா.ஜ., கணக்கிலேயே வரமுடியது. 3.5 சதவீதம் ஓட்டுள்ள கட்சி பா.ஜ., மீறினால் 6 சதவீதம் கிடைக்கும். பா.ஜ., மத்தியில் பெரிய கட்சியாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் ஏதும் இல்லை. 10 ஆண்டாக அந்த கட்சி வீடியோ பண்ணுவது, பேப்பரில் விளம்பரம் தருவது இதெல்லாம் தான். முதலில் எல்லா பூத்துக்கும் ஆட்களை போட்டுவிட்டு, பிறகு பா.ஜ.,வை போட்டிக்கு வரச்சொல்லுங்கள். வரும், 25 நாட்கள் நமக்கு எதிர்ப்பு தி.மு.க., மட்டும் தான்.
ஒவ்வொரு பூத்துக்கும், 350 ஓட்டுக்கும், ஒரு ஓட்டுகூட குறையக் கூடாது. 500, 600 ஓட்டு வாங்க வேண்டும். சொத்துவரி உயர்வு, பால் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வால் மக்கள் தி.மு.க.,வுக்கு ஓட்டு போட மாட்டார்கள். எப்போதும் தி.மு.க.,வுக்கு ஓட்டு போடும் அரசு ஊழியர்கள், இந்த முறை அவர்களுக்கு ஓட்டு போட மாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

