/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நெசவாளர் வாழ்வாதாரம் காக்க அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
/
நெசவாளர் வாழ்வாதாரம் காக்க அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
நெசவாளர் வாழ்வாதாரம் காக்க அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
நெசவாளர் வாழ்வாதாரம் காக்க அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 01, 2024 03:43 AM
ஈரோடு: ஈரோடு லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் நேற்று, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தொகுதியில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில், சமயசங்கிலி, எம்.ஜி.ஆர்., நகர், கரைமேடு, தொட்டிபாளையம், தொட்டிபாளையம் புதுார், சீராம்பாளையம், அடிக்காடு, வீரப்பம்பாளையம், வெள்ளபாறை உட்பட பல்வேறு பகுதிகளில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்பகுதி மக்களிடம் ஆற்றல் அசோக்குமார் பேசியதாவது: தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார பிரச்னைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குமாரபாளையம் பகுதியில் அதிகமாக நெசவாளர்கள் வசிக்கின்றனர். நெசவாளர்களின் வாழ்வாதாரம் காக்க, நுால் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர, மின் கட்டணம் குறைக்க நடவடிக்கை மேற்கொள்வேன். ஜவுளி ஜி.எஸ்.டி., வரி பிரச்னைக்கு தீர்வு காணவும், வருமான வரிச்சட்டத்தில், 45 நாட்களுக்கு மேற்பட்ட பாக்கி தொகைக்கு விதிக்கப்படும் வருமான வரி பிரச்னைக்கு தீர்வு காணப்படும். குமாரபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுப்பேன். இப்பகுதியில் உள்ள சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு காண, பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த முழு முயற்சி மேற்கொள்வேன். இவ்வாறு பேசினார்.
முன்னதாக சமயசங்கலியில் ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து பிரசாதம் பெற்று பிரசாரத்தை துவக்கினார். பின் வெடியரசம்பாளையம், காந்தி நகர், டீச்சர்ஸ் காலனி, ராஜாஜி நகர், அன்னை சத்யா நகர், ஐந்துபனை, ஒட்டப்பள்ளி உட்பட பல்வேறு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார்.

