/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திண்டல் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அ..தி.மு.க., வினர்
/
திண்டல் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அ..தி.மு.க., வினர்
திண்டல் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அ..தி.மு.க., வினர்
திண்டல் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அ..தி.மு.க., வினர்
ADDED : மே 14, 2024 08:00 AM
ஈரோடு: தமிழக முன்னாள் முதல்வரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க., பொது செயலாளருமான பழனிசாமி பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு, சூரியம்பாளையம் பகுதி அ.தி.மு.க., சார்பில், திண்டல் வேலாயுதசாமி கோவிலில், தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் ராமலிங்கம் தலைமையில், முன்னாள் அமைச்சர் கருப்பணன் தேரை இழுத்து தொடங்கி வைத்தார்.
இதில் முன்னாள் அமைச்சர் பி.சி.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு, முன்னாள் துணை மேயர் பழனிசாமி, முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், மாணவரணி மாவட்ட செயலாளர் ரத்தன் பிரித்வி, ஜெ., பேரவை மாநில துணை செயலாளர் வீரக்குமார், பகுதி செயலாளர்கள் பெரியார் நகர் மனோகரன், ஜெகதீஷ் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.